கடலில் பலத்த காற்று எச்சரிக்கை: கரை திரும்பிய படகுகள்

கன்னியாகுமரி கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பின. வரும் 29ஆம் தேதி வரை கன மழை பெய்யக்கூடும் என்றும், 27 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி பகுதியில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி