இருமல் மருந்து இனி வாங்குவதில் கடும் கட்டுப்பாடு

கலப்பட இருமல் மருந்துகளால் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, இனி மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இருமல் மருந்துகள் வாங்க முடியும் என மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்துள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்டதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி