ரயில் படிக்கட்டில் ரீல்ஸ் செய்தால் கடும் நடவடிக்கை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் சென்னை புறநகர் ரயில்களில், சிலர் படிக்கட்டில் தொங்குவது, சாகசம் செய்வது மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இடையூறு ஏற்படுவதைத் தடுக்கவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி