பொது இடங்களில் இருந்து தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் தகுந்த நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, நாய்களுக்கான கருத்தடை மற்றும் வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை எவ்வித தொய்வுமின்றி முறையாக செயல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.
நன்றி:NewsTamil