வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவிழந்து கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் உறுதியளித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகி காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலமானது சென்னையில் 400 கி.மீ., வேகத்தில் நிலைகொண்டு இருக்கும் நிலையில் வரும் நேரங்களில் தமிழகத்தை நோக்கி வரும் என கூறப்படுகிறது.