கடந்த 128 ஆண்டுகளாக இயங்கிவந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் மாதத்துடன் நிறுத்தப்படுவதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச கட்டணம் (ரூ 26) கொண்ட பதிவுத் தபால் சேவை, ரூ.41 கட்டணம் கொண்ட விரைவுத் தபால் சேவையுடன் இணைக்கப்படுவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. அஞ்சல் துறையின் இந்த அறிவிப்பு மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு என அவர் விமர்சித்துள்ளார்.