“கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் அணுகுசாலையைப் பாதுகாக்க கல்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஸ்ரீநாத் அறிவித்தார். மேலும், “அரவன் பொத்தையிலிருந்து முள்ளூர் துறை வரை 7 மீனவக் கிராமங்களின் அணுகுசாலையைப் பாதுகாக்க, பழைய நேர்கல் சுவர் புனரமைக்கப்படும். இதற்கான முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆய்வறிக்கையின் அடிப்படையில் வரைவு திட்ட அறிக்கை தயாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.