தவெக எம்எல்ஏ மீது கல்வீச்சு.. பெரும் பரபரப்பு

கோவை மாவட்டம், சூலூரை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியில் குப்பைக் குட்டையைத் தூர்வாரி, கழிவுநீரை நிரப்பும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தப் பணியைத் தொடங்கி வைக்க வந்த தவெக எம்எல்ஏ சுகுமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். வாக்குவாதத்தின் போது, எம்எல்ஏ மீது கூட்டத்திலிருந்து கல் வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எம்எல்ஏவை காவல்துறையினர் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

நன்றி: கோவை மெயில்

தொடர்புடைய செய்தி

✕
✕