இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவு

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (மார்ச் 04) கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,122 புள்ளிகள் சரிந்து 79,116-ல் நிறைவடைந்துள்ளது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 385 புள்ளிகள் சரிந்து 24,480-ல் நிறைவு பெற்றது. பேங்க் நிப்டி 1,084 புள்ளிகள் சரிந்து 58,755 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி