இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று பெரும் ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கி முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளன. பிஎஸ்இ சென்செக்ஸ் 1,519 புள்ளிகள் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 436 புள்ளிகள் உயர்ந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் ரூ.6 லட்சம் கோடி அதிகரித்தது. அமெரிக்கத் தேர்தல் முடிவுகள், கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் வரவு ஆகியவை இந்தச் சந்தை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
நன்றி: News18