பங்குச்சந்தையில் ரூ.1,40,00,00,00,000 கோடி சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

இந்திய பங்குச்சந்தையில் இன்று (ஜன.23) காலை முதலே அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. அதானி கிரீன், அதானி எண்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட அதானி குழுமப் பங்குகள் இன்று ஒரே நாளில் 15% வரை சரிந்தன. அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிலையில், அந்த நிறுவனங்களின் மூலதனம், ஒரே நாளில் ரூ.1.4 லட்சம் கோடி சரிந்துள்ளது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்களைக் கவலையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி