பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்தில் முடிவு

உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சர்வதேச சந்தைகளின் நேர்மறையான சமிக்ஞைகளால், குறியீடுகள் புதிய சாதனைகளை முறியடித்தன. சென்செக்ஸ் 350.81 புள்ளிகள் அதிகரித்து 74,227.63 புள்ளிகளில் நிலைத்தது. நிஃப்டி 80 புள்ளிகள் அதிகரித்து 22,514.65 புள்ளிகளில் நிறைவடைந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 83.44 ஆக உள்ளது. சென்செக்ஸ் 30 குறியீட்டில் ஹெச்டிஎஃப்சி வங்கி, டைட்டன், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் டிசிஎஸ் பங்குகள் லாபம் அடைந்தன.

தொடர்புடைய செய்தி