ராஜஸ்தான்: ஜோத்பூரில் குல தெய்வத்தை மகிழ்விக்கவும், தங்களது திருமண தடை விலகவும் சொந்த சகோதரியின் பிறந்த 16 நாட்களே ஆன குழந்தையையே கொடூரமாகப் பலி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் தாய் குளிக்கச் சென்றிருந்தபோது சித்திகள் இந்த கொடூரத்தை செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். மந்திரங்கள் உச்சரித்தபடி பலி கொடுக்கும் பெண்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அப்பெண்கள் தொடர்ந்து சூனியம் செய்வதாகவும் அக்கம்பக்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.