முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுகவின் கே.பி. முனுசாமி போட்டியிடும் தொகுதி திமுகக்கு சவாலாக இருக்கும் என கூறிய அவர், அந்த தொகுதியை எந்த எதிர்க்கட்சிக்கும் இழக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், ஓசூர், தளி, வேப்பனஹள்ளி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் திமுக வெற்றி பெறாவிட்டால், மாவட்ட செயலாளர் பதவி நீக்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.