சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை வீழ்த்த முதல்வர் ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளார். கடந்த முறை மதிமுக வென்ற இத்தொகுதியை இம்முறை திமுக நேரடியாகக் கைப்பற்றி கடற்கரை ராஜை களமிறக்கியுள்ளது. மேலும், சாத்தூரில் நீண்டகால அரசியல் செல்வாக்குக் கொண்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் நயினாரை தோற்கடிக்கும் முக்கியப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.