மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தையின் உருவச்சிலையை திறந்து விளம்பர அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மாம்பழ விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் திமுக அரசு வெற்று நாடகம் ஆடுவதாகவும், மற்ற மாநிலங்கள் மாம்பழ கூழ் ஆலைகளை விரிவுபடுத்தி மானியம் பெறுவதாகவும், தமிழக மா விவசாயிகள் மற்ற மாநில ஆலைகளை நம்பி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தப் பிரச்சினை என்றாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்க முதல்வர் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.