மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, 1,536 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் 10 இலட்சத்து 93 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், 50 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்ட வண்டியூர் பூங்கா, அங்கூரான் நவீன அறிவியல் மையம், வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டடம், HP கணினி திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.