‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை நாளை (ஆகஸட் 01) சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதயம், அறுவை சிகிச்சை, நரம்பியல், இஎன்டி, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாம்களில் பங்கேற்க உள்ளனர். சென்னையில் 15 மண்டலங்களில் முகாம்கள் நடத்தப்படும் என அரசு செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.