மகளிர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் சிறந்த ஃபினிஷராக திகழ்ந்த ரிச்சா கோஷ் பெயரில், மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முன்னதாக, ரிச்சா கோஷுக்கு மாநில அரசின் உயரிய விருதான பங்கா பூஷண் விருதும், காவல்துறையில் டி.எஸ்.பி. பணியும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.