புதுச்சேரி: காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், பரிகார பூஜை என்ற பெயரில் பணம் பறிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.