மது போதை கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ உயிரிழப்பு

தேனி அருகே சாலையை மறித்துப் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த மதுபோதை கும்பலைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், அந்தக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதவி ஆய்வாளரைக் கொலை செய்த வழக்கில் 3 பேரை உடனடியாகக் கைது செய்துள்ள தேனி நகரப் போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕