சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளரும், தேசிய இளைஞர் அணி செயலாளருமான ஸ்ரீநிதி கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். என்.டி.ஏ கூட்டணி சார்பில் வென்ற 3 அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தவெகவில் முதல்வர் விஜய் இணைத்துக் கொண்டதற்கு அவர் எக்ஸ் (X) தளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் விதித்த நிபந்தனைகளை மீறும் செயல் என்றும் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.