தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐஏஎஸ் கடந்த பிப்.14-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அண்மையில் நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள் காரணமாக, அப்பதவியில் இருந்த சண்முகசுந்தரம் மாற்றப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேர்வுகளை தடையின்றி நடத்த இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.