முதல்வர் மு.க.ஸ்டாலின், 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்க தடையாக உள்ள பழைய நிர்வாக உத்தரவை ரத்து செய்யவும், நீண்டகால விசா வழங்குதலிலும் மனிதாபிமான அடிப்படையில் சாதகமான முடிவு எடுக்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி: நியூஸ் 18