சென்னை கோயம்பேட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபான பாரில் நடனம் ஆடும்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் கார் ஏற்றிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
நன்றி: குமுதம்