எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்வது வாடிக்கையாக தொடர்கிறது. இந்நிலையில், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பாம்பன் பகுதியை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன.
நன்றி: நியூஸ் தமிழ்