ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் மற்றும் அவர்களின் ஒரு படகையும் இலங்கை கடற்படை சிறைப் பிடித்தது. தொடர்ந்து, நெடுந்தீவு கடற்படை முகாமில் வைத்து 8 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம், கைதான தமிழக மீனவர்களை ஒப்படைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கைதுக்கு எதிராக தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி