இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா, அமைச்சர் ராஜ்மோகன் சந்திப்பு

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனை இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய்யை சந்திப்பேன் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும், விஜய் முதல்வராக பொறுப்பேற்கும் தருணத்தைப் பார்க்க ஆசைப்பட்டதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாகவும், ஈழத்தமிழருக்கு ஆதரவாக விஜய் பேச வேண்டும் என்றும், சீமான் வாக்கு வாங்க மட்டுமே ஈழத்தமிழர் பிரச்னையைப் பேசினார் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி