டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (பிப்.22) நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணியை இங்கிலாந்து 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 146/9 ரன்கள் எடுத்தது. இதில், ஃபில் சால்ட் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து 62 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 16.4 ஓவரில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நன்றி:X