ஐபிஎல் தொடரில் இன்று (மே.22) நடைபெறும் 67ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி பெங்களூரு அணி பவுலிங் செய்ய தயாராகி வருகிறது.