நவீனத் தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பியான கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைக் காணொளிகளாகப் பரப்புங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், கடந்த 2 வாரங்களாக திமுகவில் புதிய இளைஞர்களின் பங்களிப்பை சமூக வலைதளங்களில் அதிகளவில் காண்கிறேன். இன்றைய டிஜிட்டல் பெரும்பாய்ச்சலுக்கு அன்றே வழிவகுத்த கலைஞரை இளைய தலைமுறை நினைவில் கொண்டு, எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்து தளங்களிலும் பரப்புங்கள் என குறிப்பிட்டுள்ளார்.