சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், நாளை (நவ.25) முதல் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில், தேவசம் போர்டு ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளது. அதன்படி, நாளையும் 5,000 பேருக்கு மட்டுமே 'ஸ்பாட் புக்கிங்' முறையில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் முன்பதிவு மூலம் ஒரு நாளைக்கு 70,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.