தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊருக்கு திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பொலிரோ வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பெண்கள் உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர். வாகனத்தை ஓட்டிய முரளிதரன் வேகமாக இயக்கியதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நன்றி: news7