சென்னையில் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் இன்று (நவ.29) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகாம் நடைபெற உள்ளது. பெயர் விடுபட்டவர்கள், முதல் முறையாக வாக்காளர்களாகப் பதிவு செய்ய விரும்புவோர் மற்றும் முகவரி மாற்றம், விவரங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

தொடர்புடைய செய்தி

✕
✕