சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல்-சாலிமார் இடையேயான சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சாலிமாரிலிருந்து புறப்படும் ரயில் (02841) மார்ச் 30-ம் தேதி வரையிலும், சென்னையிலிருந்து புறப்படும் ரயில் (02842) ஏப்ரல் 1-ம் தேதி வரையிலும் குறிப்பிட்ட கிழமைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்கால பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி