கோடை விடுமுறை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னை தாம்பரம் - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வருகிற 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும், சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வருகிற 4, 11, 18, 25 மற்றும் செப். 1 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில் இயக்கப்படும். முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.