குஜராத்தின் அகமதாபாதிலிருந்து நவ., 13, 20, 27 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (09419) வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. நவ.,16, 23, 30 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து அகமதாபாதுக்கு இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (09420) என இவை இரண்டும், வழக்கமான அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர், தாம்பரம் வழியாகச் செல்லாமல், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காட்பாடி, வேலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.