பொதுமக்கள் வெளிநாடு செல்வதற்குச் சிறப்பு வரி விதிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்கள் முற்றிலும் வதந்தி என பிரதமர்மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். வெளிநாட்டு பயணங்களுக்கு புதிய வரி அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கும் எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.