மத்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ், தமிழ்நாட்டில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களின் பணிகளை அவர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் பணிகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.