வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்: பக்தர்கள் பரவசம்

தர்மபுரி மாவட்டத்தில் வளர்பிறை பஞ்சமியையொட்டி பல்வேறு வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. காரிமங்கலம், அன்னசாகரம், இலக்கியம்பட்டி, மொடக்கேரி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் கணபதி பூஜை, வராகி ஹோமம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி