சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளிக்கு செல்லாத மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்காக சிறப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவு முகாம் நடைபெற்றது. பள்ளிக்கு செல்லாத 7,302 குழந்தைகள் கண்டறியப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 2,106 பேரிடம் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் 509 பேர் பள்ளிகளிலும், 263 பேர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், கூடுதல் கவனம் தேவைப்படும் 28 மாற்றுத்திறன் குழந்தைகள் கண்டறியப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.