ஆடிபெருக்கு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1,090 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் சிரமத்தை தவிர்க்க முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.