வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்களை (ஜூலை 17, 18, 19) முன்னிட்டு, சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 1,215 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதில் கிளாம்பாக்கத்திலிருந்து 725, கோயம்பேட்டிலிருந்து 240, மாதவரம் மற்றும் பெங்களூரிலிருந்து 250 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலின்றி பயணிக்க விரும்புவோர், TNSTC இணையதளம் அல்லது செயலி மூலம் உடனடியாக முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி