சென்னை மணலி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு பயணித்த சரக்கு ரயில் திருவள்ளூரில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 18 பெட்டிகள் தீயில் எரிந்து நாசமாயின. இதனால் திருவள்ளூர் - அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் - அரக்கோணம், சென்னை வழித்தடத்தில் 30 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக பயணிகளின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.