ரூ.10,000 லஞ்சம் கேட்டசிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடத் தகராறு தொடர்பான புகாரில், சம்பந்தப்பட்ட பெண் வீட்டில் இல்லாததால் அவரது மகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕