இஸ்ரோவுடனான ஒப்பந்தம் குறித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பொதுமக்கள் சேவைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்த, ஆந்திரப் பிரதேச அரசும் இஸ்ரோவும் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் விவசாயம், வானிலை, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற திட்டமிடல் போன்ற 42 பயன்பாடுகளுக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.