அதிமுக சட்டமன்ற குழு தலைவராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை தேர்ந்தெடுத்துள்ளதாக SP வேலுமணி தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் அளித்துள்ளார். மேலும், சி.விஜயபாஸ்கரை கொறடாவாக நியமித்துள்ளார் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார். மேலும், சட்டமன்ற அதிமுக கட்சி துணைத் தலைவராக சி.வி. சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கடிதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயர் இடம்பெறவில்லை.