தென்மேற்கு பருவமழை தொடங்கியது: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு அரபிக்கடல், வங்கக்கடல் மற்றும் அந்தமான் தீவுகளில் தொடங்கியுள்ளது. வருகிற 26ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, இன்று (மே 17) தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (மே 18) தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி