பசுமைத் தாயகம் தலைவர் பொறுப்பிலிருந்து சௌமியா அன்புமணி விடுவிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் இன்று (டிச., 29) நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகளை நியமித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பசுமைத் தாயகத்தின் புதிய தலைவராக பாமக செயல் தலைவரும், ராமதாஸின் மகளுமான ஸ்ரீகாந்தி ராமதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் பாமக கௌரவ தலைவராக மீண்டும் ஜி.கே.மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாமக உட்கட்சி பிரச்சனையால் தற்போது மருமகளை பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.