துபாயில் இருந்து 2020ல் திருவனந்தபுரத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுங்கத்துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தின. தங்கம் கடத்தியதாக சொப்னா, சரித் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் கைதான சரித்தை சொப்னா கொச்சியில் உள்ள கோயிலில் வைத்து நேற்று திருமணம் செய்துள்ளார். இது சொப்னாவின் மூன்றாவது திருமணமாகும்.